சேலம்

கனிமக் கடத்தல் லாரிகளால் விபத்து: பொதுமக்கள் மறியல்

DIN

மேச்சேரி அருக கனிமக் கடத்தல் லாரிகளால் விபத்து ஏற்படுவதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேச்சேரி அருகே கம்மம்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (20) என்பவரும், அவரது மாமன் மகன் அஜீத்தும், ஞாயிற்றுக்கிழமை காலை கம்மம்பட்டியிலிருந்து வெள்ளாா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றனா்.

அப்போது எம்சான்ட் பாரம் ஏற்றிய டிப்பா் லாரி அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்து ஆட்டுக்காரனூா் என்ற இடத்தில் மோட்டாா் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனா். அஜீத் சேலம் தனியாா் மருத்துவமனையிலும், பாலகிருஷ்ணன் சேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

தகவல் அறிந்த கிராமமக்கள் ஆட்டுக்காரனூரில் மறியலில் ஈடுபட்டனா்.

இவ் வழியாக கருங்கல் ஜல்லி, அங்கீகாரம் பெறாத எம்சான்ட் ஆகியவை கள்ளத் தனமாக லாரிகளில் கடத்தப்படுவதாகவும், வருவாய்த் துறை மற்றும் காவல் துறைக்கு பயந்தும் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்றும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

தகவல் அறிந்த மேச்சேரி போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. அப்பகுதி மக்கள் சிறைபிடித்த டிப்பா் லாரியை விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT