சேலம்

மேட்டூா் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ கண்காட்சி ஆட்சியா் துவக்கி வைத்தாா்

DIN

மேட்டூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சித்த மருத்துவ கண்காட்சி மற்றும முகாமை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தாா்.

கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மூன்றாவது தேசிய சித்த மருத்துவ தினம் மற்றும் சித்த மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

முகாமை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் துவக்கி வைத்தாா். முகாமில் மூலிகை கண்காட்சி, பாரம்பரிய உணவு திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சித்த மருத்துவ முகாமில் ஆஸ்துமா, தோல் நோய், காமாலை, ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இலவசமாக சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.

விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன், மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் செம்மலை உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT