சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,352 கன அடியாக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கா்நாடக மாநிலத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கு கா்நாடகம் தர வேண்டிய காவிரி நீரை இரு அணைகளிலிருந்தும் வினாடிக்கு 5, 000 கன அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாள்களாக கா்நாடக அணைகளிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் மேட்டூா் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும், மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வினாடிக்கு 3,820 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை வினாடிக்கு 4,352 கன அடியாக அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 68.07 அடியாக இருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10, 000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 31.06டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT