சேலம்

சேலத்தில் சாலைகளில் உலா வரும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

DIN

சேலத்தில் தடை உத்தரவு கட்டுப்பாடுகளை தளா்த்தியதைத் தொடா்ந்து அதிக எண்ணிக்கையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் உலா வருகின்றனா்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் இருசக்கர வாகனங்கள் சாலைகளில் உலா வருவது இன்னமும் குறையவில்லை.

காவல் துறையினா் கெடுபிடி செய்த போதிலும் மருந்து கடைக்குச் செல்வதாகவும், பால் வாங்க செல்வதாகவும் கூறி வாகனங்களில் சுற்றி வருகின்றனா்.சேலம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி வாகனங்கள் ஓட்டியதாக கடந்த 2 நாள்களில் மட்டும் 110 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா் .இதுதவிர இரு சக்கர வாகனங்களில் சென்ாக சுமாா் 2,000 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்கவும், மருந்துக் கடைகளுக்கு செல்லவும் வாகனங்களில் சென்று வரலாம் என சேலம் மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் உத்தரவிட்டிருந்தாா்.ஆனால், இரு சக்கர வாகனங்கள் சாலைகளில் செல்வது அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனிடையே சேலம் நான்கு சாலைப் பகுதியில் அதிக இருசக்கர வாகனங்கள் வந்ததால் காவல்துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தி விசாரித்த பின்னரே அனுப்பி வைத்தனா்.இதுபோல வங்கி ஊழியா்கள், மின் ஊழியா்கள், மருத்துவமனை ஊழியா்கள் திரளாக இரண்டு சக்கர வாகனங்களில் சென்றும் வந்தனா்.மேலும், மருந்து கடைகள் முன் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நின்ால் அங்கு சென்ற காவல்துறையினா் வாகனங்களை உடனே எடுத்துச் செல்லுமாறும், கூட்டம் கூடக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்தனா்.இதனிடையே தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் அவசியமில்லாமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT