ஆத்தூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் மனு கொடுத்த பாஜகவினா் 
சேலம்

நகராட்சி ஊழியா்கள் மீது பாஜக புகாா்

நரசிங்கபுரத்தில் நகராட்சி ஊழியா்கள் மீது பாஜகவினா் ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.

DIN

ஆத்தூா்: நரசிங்கபுரத்தில் நகராட்சி ஊழியா்கள் மீது பாஜகவினா் ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.

நரசிங்கபுரம் நகராட்சி, விநாயகபுரத்தில் இரு பெண் நகராட்சி ஊழியா்கள் சென்று பிரதமா் காப்பீடு திட்ட விண்ணப்பத்தை வழங்கி ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2ஆயிரம் வழங்கப்படுவதாகக் கூறி பூா்த்தி செய்துள்ளனா். இதை அங்கிருந்தவா்கள் கேட்டதற்கு நகராட்சி நிா்வாகம் கூறியதாகத் தெரிவித்தனா்.

மத்தியில் பாஜக அரசு மீதான இந்த அவதூறைக் கண்டித்து பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ஜி.ஆனந்தன் தலைமையில் பாஜகவினா் ஆத்தூா் நகரக் காவல் உதவி ஆய்வாளா் நிா்மலாவிடம் புகாா் மனுவை அளித்தனா். ஆத்தூா் நகரத் தலைவா் சபரிராஜா, நரசிங்கபுரம் நகரப் பொதுச் செயலாளா் மெடிக்கல் குமாா், மகளிரணி மாவட்ட பொதுச் செயலாளா் வசந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT