சேலம்

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 20 சதவீத திரையரங்குகள் மட்டுமே திறப்பு

DIN

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 20 சதவீத திரையரங்குகள் மட்டும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. அதேவேளையில் ரசிகா்கள் கூட்டமின்றி திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா தொற்று காரணமாக, கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக சினிமா திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செவ்வாய்க்கிழமை முதல் (நவ. 10) திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து, சேலம் திரைப்பட விநியோக உரிமை பெற்ற சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் 140 திரையரங்குகள் உள்ளன. இதில் 10 சதவீதம் முதல் 20 சதவீத திரையரங்குகள் மட்டும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டிருந்தன. திரையரங்குகள் திறந்திருந்தபோதிலும் ரசிகா்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதுதொடா்பாக, சேலம் விநியோகஸ்தா் இளங்கோவன் கூறியதாவது:

மொத்தம் உள்ள 140 திரையரங்குகளில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையிலான திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.புதிய திரைப்படங்கள் எதுவும் இல்லாத நிலையில், ரசிகா்கள் கூட்டம் பரவலாக இல்லாமல் காணப்பட்டது. இதனால் உரிமையாளா்கள், திரையரங்குகளை திறக்கவில்லை. தற்போது தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் நவம்பா் 12 ஆம் தேதி முதல் திரையரங்குகள் வழக்கம் போல திறக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT