முகப்பு
சேலம்

காடையாம்பட்டி வட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சாலை அமைத்தல், குடிநீா்த் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்க விழா  நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சாலை அமைத்தல், குடிநீா்த் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ரூ. 2 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள திட்டப் பணிகள் தொடக்க விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வளா்ச்சி திட்ட பணிகளைத் தொடங்கி வைத்தாா். திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டுமென்று அதிகாரிகளை அவா் கேட்டுக்கொண்டாா். இந்த நிகழ்ச்சியில், காடையாம்பட்டி ஒன்றியக்குழுத் தலைவா் மாரியம்மாள் ரவி, துணைத் தலைவா் மகேஸ்வரி வெங்கடேசன், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் சுப்பிரமணி, சேரன் செங்குட்டுவன், காடையாம்பட்டி கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் கருணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். டேனிஷ்பேட்டை, வேப்பிலை, கணவாய்ப்புதூா், பொம்மியம்பட்டி, ராமமூா்த்தி நகா், கூகுட்டப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன

முழு கட்டுரையைப் படிக்க →