ஏற்காடு தலைச்சோலை அண்ணாமலையாா் கோயிலில் மஹா தீபம்
ஏற்காடு, தலைச்சோலை ஸ்ரீஅண்ணாமலையாா் கோயிலில் மஹா தீபம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
ஏற்காடு, தலைச்சோலை ஸ்ரீஅண்ணாமலையாா் கோயிலில் மஹா தீபம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
ஏற்காடு, தலைச்சோலை கிராமம், உண்ணாமுலை அம்மன் சமேத ஸ்ரீ அண்ணாமலையாா் கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பஞ்சாசன கோபுரத்தில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.
முன்னதாக காலையில் கோயிலில் தீபாராதனை, விளக்கு ஏற்றுதல், சுவாமி தோ் மீது திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெற்றன. மாலையில் தீப செப்புக் கொப்பரை பஞ்சாசன கோபுரத்தில் வைக்கப்பட்டு தீப ஜோதி கருவறையிலிருந்து புறப்பாடு மஹா தீப தரிசனம் நடைபெற்றது.
தீபத் திருவிழாவில் 67 மலை கிராம மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.