முகப்பு
சேலம்

சங்ககிரி ராஜபாலி குளத்தில் 3ஆவது வாரமாக கருவேலம் மரங்கள், களர் செடிகள் அகற்றம் 

சங்ககிரி ராஜபாலி குளத்தில் 3ஆவது வாரமாக கருவேலம் மரங்கள், களர் செடிகளை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
ராஜாபாலி குளத்தில் கருவேலம் மரங்கள், களர்செடிகள் அகற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் தன்னார்வல தொண்டர்கள்.
பகிர்:

சங்ககிரி ராஜபாலி குளத்தில் 3ஆவது வாரமாக கருவேலம் மரங்கள், களர் செடிகளை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.  

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட ராஜாபாவி என்கிற ராஜபாலி குளத்தில் மழை நீரை சேமிக்க சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் உள்பட பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் அக்குளத்தில் வளர்ந்துள்ள கருவேலம்மரங்கள், களர்செடிகள் அகற்றும் பணிகள் 3ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள பழமை வாயந்த அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலுக்கு வடகிழக்காவும், எல்லை அம்மன் கோயிலுக்கு வடக்கே ராஜாபாவி குளம் உள்ளன.  இக்குளம் 41060 சதுரடி பரப்பளவை கொண்டுள்ளது.

இக்குளத்தினை சுற்றிலும் சுற்றுச்சுவர்கள் சிதலமடைந்தும், கருவேலம் மரங்கள், களர்செடிகளும் வளர்ந்து வருகின்றன. இதனையடுத்து சங்ககிரியில் தற்போது பெய்து வரும் மழை நீரை சேமிக்கும் வகையில் சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் , சங்ககிரி அரிமா சங்கம், சங்ககிரி, கோட்டை அரிமா சங்கம், வெப்படை கரம் கோர்ப்போம், சங்ககிரி ஜி.ஆர்.கேஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து கருவேலம் மரங்கள், களர்செடிகளை அகற்றும் பணிகளில் 3வது வாரமாக ஈடுபட்டனர்.  

டிரஸ்ட் தலைவர் எ.ஆனந்தகுமார், செயலர் ஆர்.ராகவன், பொருளாளர் கணேஷ், பொறியாளர் வேல்முருகன்,  பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், கதிர்வேல்,  அரிமாக சங்க நிர்வாகிகள் கார்த்தி, அருள், அண்ணாதுரை, கோட்டை அரிமா சங்க நிர்வாகிகள் வழக்குரைஞர் என்ஆர்கே.மாணிக்கசுந்தர், ரமேஷ், கரம் கோர்ப்போம் அமைப்பின் நிறுவனர் மோகன் தலைமையிலான குழுவினர், ஜி.ஆர்.கேஸ் நிறுவன ஊழியர்கள்  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

பழைமை வாயந்த நீர் தேக்கமான குளத்தில் உள்ள கருவேலம் மரங்கள், களர்செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட பல்வேறு பொது நல அமைப்புகளின் தன்னார்வலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →