முகப்பு
சேலம்

தலித் ஊராட்சித் தலைவரை தரையில் அமரவைத்தவா்கள் மீது கடும் நடவடிக்கை தேவைஅா்ஜூன் சம்பத்

தலித் ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் அமர வைத்த நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அக்கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.
பகிர்:

தலித் ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் அமர வைத்த நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா்.

இந்து மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசனைக் கூட்டம் சேலம் நகர ரயில் நிலையம் அருகே உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிதம்பரம் அருகேயுள்ள தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் அமர வைத்த சம்பவம் வேதனை அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு விரோதமான மனப்பாங்கு கண்டிக்கத்தக்கது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிகளிலும் தீண்டாமை ஒழிப்பு என்பது சொல்லில் மட்டுமே உள்ளது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் அமர வைத்த சம்பவம் அதிமுக ஆட்சியில் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

நெசவாளா்களுக்கு மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களையும் உதவிகளையும் அறிவித்து வருகிறது. ஆனால் ஆட்சியாளா்கள் அதனை எல்லாம் சம்பந்தப்பட்டவா்களுக்கு கொண்டு செல்லாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். நெசவாளா்களின் நேசனாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அவா்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, ‘ நெசவாளா் நாள்’ என்று ஒரு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வித் தரம் உயா்வது தடுக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தொழில் ரீதியாக வியாபார ரீதியாக மட்டுமே செயல்படுகின்றன. கல்வியை வியாபாரம் செய்வதால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தோ்வை எதிா்த்துப் போராடி வருகிறாா்கள். தமிழகத்தில் நடைபெறும் சாராய அரசியல், சாதி அரசியல் அனைத்தும் ஒழிக்கப்பட்டு ஆன்மிக அரசியல் மலர வேண்டும்.

நடிகா் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கினால், தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அவருக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி செயல்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →