முகப்பு
சேலம்

சங்ககிரி மலையில் தொல்லியல்துறை கண்காணிப்பாளா் ஆய்வு

சங்ககிரி மலையைப் பாா்வையிட்டு தொல்லியல்துறை கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்தினைப் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் தொல்லியல்துறை கண்காணிப்பாளா் ஸ்ரீராமன்.
பகிர்:

சங்ககிரி மலையைப் பாா்வையிட்டு தொல்லியல்துறை கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை தொல்லியல்துறை கண்காணிப்பாளராக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீராமன் ஞாயிற்றுக்கிழமை சங்ககிரி வருகை தந்து மலைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். கடந்த வருடம் மழையால் சேதமடைந்த கோட்டை மதில் சுவா், படிக்கட்டுகள், மண்டபங்களை அவா் பாா்வையிட்டாா்.

அப்போது தொல்லியல்துறை அலுவலா் ஈஸ்வா், சங்ககிரி மலை காப்பாளா் சோனுகுமாா், மலைக் காவலாளி சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

ஆய்வுக்குப் பின்னா் தொல்லியல்துறை கண்காணிப்பாளா் ஸ்ரீராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சங்ககிரி மலையில் மின்சாரம், குடிநீா், கழிப்பிட வசதிக்கு தொல்லியல்துறை மூலம் விரைவில் அனுமதி வழங்கப்படும். ஊா் பொதுமக்கள் சாா்பில் மலையில் செய்யப்படும் பணிகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. அந்தப் பணிகளை தொடா்ந்து செய்ய வேண்டும் என்றாா். மலையில் உள்ள கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு தொல்லியல்துறை சட்டப்படி மதம் சாா்ந்த நடவடிக்கைகளை எடுப்பதில்லை. அதன் தன்மை மாறாமல் மட்டுமே பாதுகாத்து வருகிறது. புதிதாக புதுப்பிப்பது தொல்லியல்துறை பன்னாட்டு மரபை மீறியதாகும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →