முகப்பு
சேலம்

சேலத்தில் இந்திய கம்யூ. கட்சியினர் மறியல்

நங்கவள்ளி பேருந்து நிலையத்தின் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
சேலத்தில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூ. கட்சியினர்.
பகிர்:

நங்கவள்ளி பேருந்து நிலையத்தின் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். 

வேளாண் மசோதாவைக் கண்டித்து சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேருந்து நிலையத்தின் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் பழ.ஜீவானந்தம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நங்கவள்ளி ஜலகண்டபுரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உடனடியாக ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையிலான காவல்துறையினர் 50 பெண்கள் உட்பட172 நபர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். நங்கவள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் வேளாண் சட்டங்களை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →