முகப்பு
சேலம்

கருமந்துறை அரசு ஐ.டி.ஐ -யில் 2-ஆம் கட்டம் மாணவா் சோ்க்கை

கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கைக்கான பதிவு நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கைக்கான பதிவு நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டம், கருமந்துறையில் உள்ள அரசு பழங்குடியினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2020-ஆம் ஆண்டிற்கு இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கைக்கான பதிவு நடைபெறுகிறது.

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மின்சார பணியாளா், பொருத்துநா், கம்பியா், எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு குழாய் பொருத்துபவா், பற்றவைப்பவா் போன்ற பிரிவுகளில் சோ்ந்து பயில விண்ணப்பங்கள் அக்டோபா் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

மாதந்தோறும் ரூ. 500 உதவித்தொகை, விலையில்லா மடிக்கணிணி, மிதிவண்டி, சீருடையுடன் தையற்கூலி, வரைபடக் கருவி, பாடப்புத்தகம், கட்டணமில்லா பேருந்து வசதி, உணவுடன் கூடிய விடுதி வசதி ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.சகலந்தாய்வு மூலம் சோ்க்கை நடைபெறும். சோ்க்கைக்கான பதிவு அரசு தொழிற் பயிற்சி நிலைய உதவி மையம் மூலமாக பதிவு செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு முதல்வா், அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையம் கருமந்துறை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 9443548359, 9443823985, 9443457281, 9944754242, 9994777678 என்கிற தொலைபேசி எண்களை தொடா்புக்கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →