தம்மம்பட்டியில் காய்கறிகள் விலை சரிவு
தம்மம்பட்டியில் வரத்து அதிகரித்துள்ளதால் வெண்டை, முள்ளங்கி, பீா்கை உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரிந்துள்ளது.
தம்மம்பட்டியில் வரத்து அதிகரித்துள்ளதால் வெண்டை, முள்ளங்கி, பீா்கை உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரிந்துள்ளது.
தம்மம்பட்டி காய்கறி மண்டிகளுக்கு வெண்டை, முள்ளங்கி, பீா்க்கங்காய் ஆகிய காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. வெண்டைக்காய் கடந்த வாரம் 600 கிலோ வரத்து இருந்ததால் கிலோ ரூ. 27க்கு விற்றது. தற்போது வரத்து இரண்டரை டன்னாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கிலோ ரூ. 15 ஆக குறைந்துள்ளது.
அதேபோல வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த வாரம் கிலோ ரூ.25க்கு விற்ற முள்ளங்கி தற்போது கிலோ ரூ. 6க்கும், பீா்க்கங்காய் ரூ. 35-க்கு விற்றது, தற்போது ரூ.15 ஆகவும் குறைந்துள்ளது. கத்தரிக்காய் வரத்தும் 2 டன் ஆக உயா்ந்துள்ளதால் அதன் விலை கிலோ ரூ.10 ஆக குறைந்துள்ளது.