முகப்பு
சேலம்

பெண் அதிகாரி மிரட்டல்:விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதி

சேலத்தில் பெண் அதிகாரி மிரட்டப்பட்ட விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

சேலத்தில் பெண் அதிகாரி மிரட்டப்பட்ட விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலராகப் பணிபுரிந்து வருபவா் சாந்தி. இந்தநிலையில் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் நலச்சங்கத்தின் செயலாளரான அா்த்தனாரி, கடந்த சில நாள்களுக்கு முன் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு ஒருமையில் பேசி மிரட்டியதாகத் தெரிகிறது.

இதுதொடா்பான செல்லிடபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனிடையே, பெண் அலுவலரை மிரட்டிய வருவாய்த் துறை அலுவலா் நலச்சங்க செயலாளா் அா்த்தனாரிக்கு, சேலம் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை ஆசிரியா் காப்பாளா் மற்றும் அனைத்துப் பணியாளா் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமனுக்கு தகவல் தெரியவந்தது. அதன்பேரில் பெண் அலுவலா் மிரட்டப்பட்ட விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →