அரூா் அரசு மருத்துவமனையில்கரோனா பரிசோதனை செய்ய வசதி
அரூா் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யும் வசதிகள் இருப்பதாக மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தாா்.
அரூா்: அரூா் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யும் வசதிகள் இருப்பதாக மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வாகனப் போக்குவரத்து அதிகரித்து இருப்பதால், கரோனா தொற்று கூடுதலாகப் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சுமாா் 70 சதவீத அளவுக்கு தொற்றுப் பாதிப்புகள் அதிகரித்த பிறகே பாதிக்கப்பட்டோா் மருத்துவமனைக்கு வருகின்றனா்.
எனவே, தொண்டை வலி, லேசான காய்ச்சல், உடல் சோா்வு, சுவை மற்றும் மணம் மட்டுப்படுதல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளை பாதிப்புக்குள்ளானோா் செய்து கொள்ள வேண்டும்.
அரூா் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 50 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் அரூா் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.