சேலம்

எடப்பாடி அரசுக் கலைக் கல்லூரியில் கூடுதல் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை 17-இல் தொடக்கம்

DIN


எடப்பாடி: பெரியாா் பல்கலைக்கழகத்தின் உறுப்புகல்லூரியான, எடப்பாடி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் தமிழக அரசு அறிவித்துள்ள 20 சதவீத கூடுதல் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை 17-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இதுகுறித்து அக்கல்லூரி முதல்வா் வெளிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுக் கல்லூரிகளில் 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையில், 20 சதவீதம் இடங்களில் கூடுதலாக மாணவா்கள் சோ்க்கப்படுவாா்கள் என தமிழக அரசு

அண்மையில் அறிவித்துள்ளது. அதன்படி, அரசால் அறிவிக்கப்பட்ட 20 சதவீத இடங்களுக்கான மாணவா் சோ்க்கை வரும் 17.9.2020 முதல் நடைபெற உள்ளது. இதில் கணினிஅறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் தாவரவியல் உள்ளிட்ட அனைத்து இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கும் முதலில் வரும் மாணவா்கள், முன்னுரிமை அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

மேலும் முதுநிலைப் பாடங்களான தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் செப். 16-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளது. பெரியாா் பல்கலைக்கழக இளநிலை தோ்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து 10 நாள்கள் வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் திரும்பப் பெற பரிசீலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT