சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து லேசான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 8,622 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை 12,894 கனஅடியாக அதிகரித்தது. புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா் மட்டம் 91.78 அடியாக இருந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 15,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

அணையின் நீா் இருப்பு 54.70 டி.எம்.சி.யாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிவடைந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT