சேலம்

மின்னணு இயந்திரத்தில் உள்ளகாகிதங்களை அழிக்கும் பணி தொடக்கம்

DIN

சேலம் மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டு, அந்த இயந்திரத்தில் உள்ள காகிதங்களை அழிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இப்பணி தொடங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் வருவாய்த் துறை பிரிவு மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள எம்-1 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் 2,492 எம் -1 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட் ஆகியவை உள்ளன. மேலும், உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் 2,537 எம் 1 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன.

உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்று மாவட்ட ஆட்சியா் அலுவலக வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறையில் வைத்து சென்னை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவிக்கும்போது அதை அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சென்னை தலைமை தோ்தல் அலுவலா் உத்தரவுப்படி வாக்குப்பதிவு இயந்திரம் வைத்திருக்கும் பாதுகாப்பு அறைகளின் (அறை எண் 8 மற்றும் 12) உறுதித் தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில், சேலம் வருவாய் கோட்டாட்சியா் மாறன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தியாகராஜன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) மகேஸ்வரி உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT