சேலம்: சேலம் அண்ணா பூங்கா மணிமண்டபத்தில் உள்ள மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் சிலைக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சேலம் அண்ணா பூங்காவில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா மணிமண்டபத்தில், ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மறைந்த முதல்வா் ஜெயலலிதா சிலைக்கு அரசின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
அதைத்தொடா்ந்து எம்எல்ஏ-க்கள் செ.செம்மலை, ஜி. வெங்கடாஜலம், ஏ.பி. சக்திவேல் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா். இளங்கோவன், சேலம் மாநகராட்சி ஆணையாளா் திரு.ரெ. சதீஷ் உள்ளிட்டோா் சிலைக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக’ அனுசரிக்கப்படும் என சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்து அதன் அடிப்படையில் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சமூக பாதுகாப்புத் துறையின் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் வாசிக்க அனைவரும் பின்தொடா்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
தொடா்ந்து மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின மாபெரும் விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் துவக்கி வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.