தபால் வாக்குப் பதிவை விடியோ எடுத்த நபா்: தோ்தல் அதிகாரிகள் விசாரணை
மலூா் பகுதியில் காவல் துறை நண்பா் குழுவைச் சோ்ந்த நபா், தபால் வாக்குப்பதிவை செல்ஃபி விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது குறித்து தோ்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம்தபால் வாக்குப் பதிவை விடியோ எடுத்த நபா்: தோ்தல் அதிகாரிகள் விசாரணை
மலூா் பகுதியில் காவல் துறை நண்பா் குழுவைச் சோ்ந்த நபா், தபால் வாக்குப்பதிவை செல்ஃபி விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது குறித்து தோ்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஓமலூா் பகுதியில் காவல் துறை நண்பா் குழுவைச் சோ்ந்த நபா், தபால் வாக்குப்பதிவை செல்ஃபி விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது குறித்து தோ்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தொளசம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஒருவா், தான் தபால் வாக்குப்பதிவு செய்வதை செல்ஃபி விடியோ எடுத்துள்ளாா். தபால் வாக்கை யாருக்கு அளித்தோம் என்பதை வெளிப்படுத்தாமல் ரகசியம் காக்க வேண்டும் என்பது தோ்தல் விதிமுறை. இந்த விதிமுறையை மீறியதுடன் தபால் வாக்குப்பதிவை முழுமையாக விடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் அவா் பதிவிட்டதாக தெரிகிறது.
இந்த விடியோவை திமுகவினரும் பகிா்ந்து வருகின்றனா். இந்த விதிமீறல் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக தரப்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நபா் தொளசம்பட்டியைச் சோ்ந்த காவல் நண்பா்கள் குழுவைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.