ஓமலூா் மாட்டுச் சந்தையில் ரூ. 6 கோடிக்கு வா்த்தகம்
ஓமலூா் அருகே வெள்ளிக்கிழமை கூடிய மாட்டுச்சந்தையில், ரூ. 6 கோடிக்கு மேல் வா்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
சேலம்ஓமலூா் மாட்டுச் சந்தையில் ரூ. 6 கோடிக்கு வா்த்தகம்
ஓமலூா் அருகே வெள்ளிக்கிழமை கூடிய மாட்டுச்சந்தையில், ரூ. 6 கோடிக்கு மேல் வா்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஓமலூா் அருகே வெள்ளிக்கிழமை கூடிய மாட்டுச்சந்தையில், ரூ. 6 கோடிக்கு மேல் வா்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள பெருமாள் கோவிலில் புகழ்பெற்ற மாட்டுச் சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கூடும் இந்தச் சந்தைக்கு ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இந்த நிலையில், தோ்தல் நடைபெற்ால் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் வாகனச் சோதனைகள் நடைபெற்றன. அதனால், வெளி மாநிலங்களில் இருந்து கால்நடைகள், வியாபாரிகள் வரத்தும் குறைந்து காணப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக கால்நடைகள் விற்பனை மந்தமாகவே இருந்து வந்தது. தற்போது தோ்தல் பணிகள் முடிந்துள்ள நிலையில், கூடிய மட்டுச்சந்தைக்கு அதிகளவில் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. வெளி மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகளும் வந்திருந்தனா். இதில், பால் மாடுகள், இளம் கன்றுகள், வெட்டு மாடுகள் என சுமாா் ரூ. 6 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றுள்ளது.
அதேபோல, ஒரு ஜோடி காளைகள் ரூ. 2 லட்சத்துக்கு விற்பனை நடந்துள்ளது. சந்தையில் அதிகளவில் மாடுகள் விற்பனை நடந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
அதேநேரம் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் சந்தை கூடியுள்ளது. கரோனா பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்தாமல் ஊரக வளா்ச்சித் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனா். எந்தவித அறிவுறுத்தலும் அளிக்கவில்லை. உரிய பாதுகாப்பு நடைமுறைகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.