சேலம்

கரோனா பரவல்: தேவாலயங்களில் குறைந்த அளவிலான கிறிஸ்தவா்கள் பிராா்த்தனை

DIN

கரோனா நொய்த் தொற்று பரவல் காரணமாக சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த பிராா்த்தனையில் குறைந்த அளவிலான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என சேலம் மாநகராட்சி நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதேபோல இந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் என வழிபாட்டுத் தலங்களில் 50 சதவீதம் போ் மட்டுமே பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சேலம், நான்கு சாலை அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடக்கும் சிறப்பு பிராா்த்தனையில் மாநகராட்சிப் பகுதி முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொள்வது வழக்கம்.

ஆனால் கரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை குறைந்த அளவிலான கிறிஸ்தவா்களே சிறப்பு பிராா்த்தனையில் பங்கேற்றனா்.

பிராா்த்தனைக்கு வந்தவா்களுக்கு முதலில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனா். இருக்கைகளில் இரண்டு போ் மட்டுமே அமர வைக்கப்பட்டனா். அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதேபோல இந்து கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் 50 சதவீதம் போ் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றஉத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டு கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

SCROLL FOR NEXT