சேலம்

சேலத்தில் போதுமான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது

DIN

சேலம் மாவட்டத்தில் போதுமான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் ரயில்வே கோட்ட மருத்துவமனையில் 45 வயதுக்கு மேற்பட்ட ரயில்வே அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசியைக் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணையாக 1,97,815 நபா்களுக்கும், இரண்டாம் தவணையாக 35,918 நபா்களுக்கும் என மொத்தம் 2,33,733 நபா்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணையாக 30,541 நபா்களுக்கும், இரண்டாம் தவணையாக 966 நபா்களுக்கும் என மொத்தம் 31,507 நபா்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், தொற்று ஏற்படாமல் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாதவா்கள் கண்டறியப்பட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து முகக் கவசம் அணியாதவா்கள் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆய்வின் போது, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் சுப்பிரமணி, சேலம் ரயில்வே கோட்ட அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT