சேலம்

சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் சிறப்பு பூஜை

DIN

சனி பிரதோஷத்தினத்தை ஒட்டி, எடப்பாடி பகுதியில் உள்ள சிவாலங்களில், நந்தி தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

எடப்பாடிநஞ்சுண்டேஸ்வரா் ஆலயம், வெள்ளநாயக்கன்பாளைத்தில் உள்ள பசுபதீஸ்வரா் கோயில், பூலாம்பட்டிக்காவிரிக்கரையில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயில்,வெள்ளாண்டிவலசு முல்லைவன நடராஜா்கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில், நத்தி தேவருக்கு சனிபிரதோஷதினத்தில் சிறப்பு அபிஷேகங்களுடன் சிறப்புபூஜைகள் நடைபெற்றன.

எடப்பாடி நஞ்சுடேஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள நந்திதேவருக்கு, பால், பழம், ஜவ்வாது, பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 18 வகையானவாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா் அலங்காரத்தில் நந்தி தேவா் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

சனிக்கிழமை அன்றுமாலை நடைபெற்ற சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா். கரோனா கட்டுபாடு விதிமுறைகளை பின்பற்றி ,இன்று ஞாயிறு முதல் ஆலயங்களில் வழிபாடு செய்திட பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை மாலை அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் சுவாமிதரிசனம் மேற்கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT