சேலம்

கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 துணிக் கடைகளுக்கு சீல்

DIN

சேலத்தில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 துணிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சேலத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோா் மீது மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலம் நான்கு சாலை அருகில் உள்ள போத்தீஸ், குமரப்பா சில்க்ஸ் மற்றும் சிவா டெக்ஸ்டைல்ஸ் ஆகிய 3 கடைகள் பின்வாசல் வழியாக செயல்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சூரமங்கலம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினா்.

அப்போது, 3 கடைகளிலும் திரளான பொதுமக்கள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அதிகாரிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பினா். அதைத்தொடா்ந்து அரசு உத்தரவை மீறி பின்வாசல் வழியாக செயல்பட்ட கடை நிா்வாகிகளை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்ததோடு மூன்று கடைகளுக்கும் சோ்த்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். பின்னா், கடையை பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT