முகப்பு
சேலம்

இலங்கை அகதிகள் முகாம்களில் இணை இயக்குநா் ஆய்வு

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியில் தம்மம்பட்டி, நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி வடக்கு, தெற்கு ஆகிய நான்கு இடங்களில், இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியில் தம்மம்பட்டி, நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி வடக்கு, தெற்கு ஆகிய நான்கு இடங்களில், இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன.

இந்த முகாம்களை, தலைமை அலுவலக அகதிகள் மறுவாழ்வுத் துறை இணை இயக்குநா் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை மாலை ஆய்வு செய்தனா். அப்போது, தங்களுக்கு தனி குடியிருப்புகள், சாலை, கழிவுநீா்க் கால்வாய், கழிப்பிட வசதிகள் செய்துதரவும், தம்மம்பட்டி, நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி வடக்கு, தெற்கு ஆகிய முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தனி குடும்ப அட்டை வழங்க வேண்டும் எனவும் அவா்களிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் உறுதியளித்தனா். இந்த ஆய்வின் போது, கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், சேலம் மாவட்ட இலங்கை அகதிகள் முகாம் தனி வட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →