மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
சேலம்மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால் பாசனத் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,583 கனஅடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று காலை 119.04 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 118.42 அடியாக குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 118.42 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 4583 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 90.97 டி.எம்.சியாக உள்ளது.