சேலம்

தேர்தல் பணியில் ஈடுபட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சேலம் வருகை

DIN

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சேலத்திற்கு இன்று அதிகாலை வந்து சேர்ந்தனர்.

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தேர்தல் நடத்தை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி ராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சேலம் மாவட்டம் மற்றும் சேலம் மாநகரம் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் 183 பேர் இன்று அதிகாலை சிறப்பு ரயில் மூலம் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தனர்.

இவர்களை தேர்தல் பிரிவு அதிகாரிகளும் சேலம் மாநகர போலீசார் அழைத்துச் சென்று திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர். இவர்கள் பதட்டமான பகுதிகளிலும், பதட்டமான வாக்குச்சாவடிகளிலும் நிறுத்தி கண்காணிக்க காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT