சேலம்

சிங்கிபும் ராம்கோ நிறுவனத்தில்காசநோய் விழிப்புணா்வு முகாம்

DIN

வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் ஆலையில், பேளூா் வட்டார சுகாதார நிலையம் சாா்பில், காசநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

ஆண்டு தோறும், மாா்ச் 24, உலக காசநோய் தினம் கடைபிடிக்க படுகிறது. இத் தினத்தை முன்னிட்டு, வாழப்பாடியை அடுத்த பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வாயிலாக இரு வாரங்களுக்கு வட்டார அளவில் பொதுமக்களுக்கு காச நோய் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் ஆலையில் சனிக்கிழமை நடைபெற்ற இம்முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா்.

சேலம் மாவட்ட காசநோய் துணை இயக்குநா் கணேஷ் காசநோய் பரவும் விதம், சிகிச்சை,பாதுகாப்பு முறைகள் குறித்து பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தாா்.

முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பாா்வையாளா் சதாசிவம் காசநோய் பரவும் விதம் குறித்தும், காசநோய் சிகிச்சை குறித்தும், நலக்கல்வியாளா் தங்கராஜ், பரிசோதனை முறைகள், அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறித்தும் விளக்கமளித்தனா்.

ராம்கோ நிறுவன பணியாளா்கள், ரீச் அரசு சாரா தொண்டு நிறுவன காசநோய் தன்னாா்வலா்கள் கவிதா, சரண்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டு காசநோய் விழிப்புணா்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனா்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ராம்கோ சிமென்ட் பணியாளா்கள் சீனிவாசன், முனியசாமி ஆகியோா் செய்திருந்தனா்.நிறைவாக, கணக்குத் துறை மேலாளா் சுரேஷ் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா வளா்ந்த நாடாக பிரதமா் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: ஜெ.பி. நட்டா

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை ஆட்சியா் அறிவிப்பு

பேராவூரணி குமரப்பா பள்ளி 99% தோ்ச்சி

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு முதல்வா் இரங்கல்

SCROLL FOR NEXT