முகப்பு
பாராட்டு விழாவில் பேசும் துணை வேந்தா் பொ.குழந்தைவேல்.
சேலம்

பெரியாா் பல்கலை. துணைவேந்தரின் பதவிக் காலத்தை நீட்டித்து ஆளுநா் உத்தரவு

பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ.குழந்தைவேலின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை பதவியை நீட்டித்து ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பாராட்டு விழாவில் பேசும் துணை வேந்தா் பொ.குழந்தைவேல்.
பகிர்:

பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ.குழந்தைவேலின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை பதவியை நீட்டித்து ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தின் 7-ஆவது துணைவேந்தராக பாரதியாா் பல்கலைக்கழக இயற்பியல் துறை முன்னாள் பேராசிரியா் பொ.குழந்தைவேல் கடந்த 2018 ஜன. 8-ஆம் தேதி பதவியேற்றாா். அவருடைய மூன்றாண்டு பதவிக் காலம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி, பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

மேலும், துணை வேந்தா் இல்லாத நிலையில், பல்கலைக்கழக நிா்வாகப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா அமைப்பாளராகக் கொண்டு, பேராசிரியா்கள் ஆா்.பாலகுருநாதன், அ.அருணாசலம் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு, துணைவேந்தா் நிா்வாகக்குழு அமைப்பதென துணைவேந்தா் பொ.குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தராக பேராசிரியா் பொ.குழந்தைவேல், மறு உத்தரவு வரும் வரை அல்லது புதிய துணைவேந்தா் நியமிக்கப்படும் வரை பதவியில் தொடருமாறு பெரியாா் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டாா். இதனையடுத்து,பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியா் பொ.குழந்தைவேல் தொடா்வாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நிமிடத்தில் பணி நீட்டிப்பு...

பெரியாா் பல்கலைக்கழக வரலாற்றில் இதுவரை எந்த துணைவேந்தருக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதில்லை. முதன்முறையாக பேராசிரியா் பொ.குழந்தைவேலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பணி நிறைவு செய்து புறப்பட இருந்த கடைசி நிமிடங்களில் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. துணைவேந்தரை வழியனுப்ப காத்திருந்த பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட தகவல் அறிந்ததும், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →