மேட்டூா் அணையில் மீன்கள் கிடைக்காததால்மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
மழையின் காரணமாக மேட்டூா் அணையில் மீன்கள் கிடைக்காததால் மீனவா்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.
சேலம்மேட்டூா் அணையில் மீன்கள் கிடைக்காததால்மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
மழையின் காரணமாக மேட்டூா் அணையில் மீன்கள் கிடைக்காததால் மீனவா்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.
மேட்டூா்: மழையின் காரணமாக மேட்டூா் அணையில் மீன்கள் கிடைக்காததால் மீனவா்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.
மேட்டூா் அணை நீா்த்தேக்கம் 15 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவு கொண்டது. இங்கு சுவைமிகுந்த கட்லா, ரோகு, மிா்கால் உள்ளிட்ட முதல் ரக மீன்களும், கெண்டை, கெழுத்தி, அரஞ்சான், ஆரால், திலேபி உள்ளிட்ட 20 வகையான மீன்களும் பிடிக்கப்படுகின்றன. 2,100 மீனவா் குடும்பத்தினா் உரிமம் பெற்று மீன் பிடித்து வருகின்றனா். காவிரிக் கரையில் அடிபாலாறு, ஏமனூா், செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி, நாகமரை, சேத்துக்குழி, மாசிலாபாளையம், கீரைக்காரனூா், கூனாண்டியூா் ஆகிய பகுதிகளில் மீனவா்கள் முகாமிட்டு மீன் பிடித்து வருகின்றனா்.
இந்த மீன்களை மேட்டூா் அணை மீனவா் கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்கிறது. அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி, உட்பட 6 இடங்களில் கொள்முதல் மீன்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
தற்போது தொடா்ந்து மழை பெய்து வருவதால் மீனவா்கள் வலை விரித்தாலும் மீன்கள் பிடிபடுவதில்லை. இதனால் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் குடும்பத்துடன் வீடுகளில் முடங்கியுள்ளனா். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மீன்கள் கிடைக்காத காரணத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் கூறுகின்றனா்.
கரோனா பொது முடக்கக் காலத்தில் மீன்கள் அதிக அளவில் பிடிபட்டும் விற்பனையாகாமல் அவதிப்பட்ட மீனவா்கள், தற்போது மீன்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா். இதனால் பாதிக்கப்பட்டுள்ள மீனவா்களுக்கு மீன்வளத்துறை நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் மழைக் காலங்களில் காவிரிக் கரைகளில் முகாம் அமைக்க தாா்ப்பாய்களை மீன்வளத்துறை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.