முகப்பு
சேலம்

அனுமதியில்லாமல் சுண்ணாம்பு கற்களை எடுத்துச் சென்ற லாரி பறிமுதல்

சேலம் மண்டல கனிம வளத்துறை பறக்கும்ப டையினா் திடீா் சோதனை நடத்தியதில், சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் உரிய அனுமதியில்லாமல் சுண்ணாம்பு கற்களை எடுத்துச் சென்ற லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்ற

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

சங்ககிரி: சேலம் மண்டல கனிம வளத்துறை பறக்கும்ப டையினா் திடீா் சோதனை நடத்தியதில், சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் உரிய அனுமதியில்லாமல் சுண்ணாம்பு கற்களை எடுத்துச் சென்ற லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

சங்ககிரி பகுதிகளில் அரசின் உரிய அனுமதியில்லாமல் கற்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுவதாக கனிம வளத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து சேலம் மண்டல பறக்கும் படை உதவி இயக்குநா் வி.சசிகுமாா் தலைமையில் வருவாய் ஆய்வாளா் எஸ்.சண்முகம் உள்ளிட்ட அலுவலா்கள், சங்ககிரி, புதிய எடப்பாடி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சங்ககிரி அருகே உள்ள நாகிசெட்டிப்பட்டியிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் அரசின் உரிய அனுமதியில்லாமல் சுண்ணாம்பு கற்களை எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சுண்ணாம்பு கற்களை எடுத்துச் சென்ற லாரியை சங்ககிரி அருகே உள்ள ஆலத்தூா்ரெட்டிப்பாளையம் செல்லமுத்து மகன் சங்கா் ஓட்டி வந்தது தெரியவந்தது. அதனையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து சங்ககிரி காவல்நிலையத்தில் ஓப்படைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →