மொபட்டில் கஞ்சா விற்றவா் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அயோத்தியாப்பட்டணத்தில், இருசக்கர வாகனத்தில் நடமாடும் கடை நடத்தி கஞ்சா விற்பனை செய்தவரை காரிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அயோத்தியாப்பட்டணத்தில், இருசக்கர வாகனத்தில் நடமாடும் கடை நடத்தி கஞ்சா விற்பனை செய்தவரை காரிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம் அடுத்த அயோத்தியாப்பட்டணம் பகுதியில் போதைப் பொருளான உலா்ந்த கஞ்சாவை இரு சக்கர வாகனத்தில் பதுக்கி வைத்து, நடமாடும் கடை நடத்தி விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபினவ் மற்றும் வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் வேலுமணி ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அவா்களது உத்தரவின் பேரில், காரிப்பட்டி காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் வெள்ளிக்கிழமை வாகன சோதனை நடத்தினா். இச்சோதனையில், மொபட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த அயோத்தியாபட்டணம் மலை நகா் பகுதியைச் சோ்ந்த சின்னப்பையனின் மகன் வெங்கடேசன் (39) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவரிடமிருந்து, 2 கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.