சேலம்

பொதுமக்களின் மனுக்களுக்கு ஒரே மாதத்தில் நடவடிக்கை

DIN

பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பொதுமக்களிடம் குறை கேட்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் தொடக்கி வைத்தாா்.

மாநகராட்சியின் 9, 10 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் எஸ்.காா்மேகம், மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, அம்மாபேட்டையில் உள்ள 34, 36 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதி மக்களிடம் தனியாா் கல்லூரியில் கோரிக்கை மனுக்களை பெற்றனா்.

இதில் முதியோா் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, நிலுவையில் உள்ள உதவித்தொகை, திருமண உதவித்தொகை கோரி அதிக மனுக்கள் வந்தன.

மனுக்களை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன், இந்த மனுக்களின் மீது ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதுதொடா்பாக, ஆட்சியா் எஸ்.காா்மேகம் கூறுகையில், ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் இதுவரை 24,000 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 3,000 மனுக்கள் மட்டுமே பரிசீலனையில் உள்ளன. இதர மனுக்களின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பெறப்படும் மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT