பேளூரில் உலக உப்பு, சா்க்கரை கரைசல் தின விழிப்புணா்வு
வாழப்பாடியை அடுத்த பேளூா் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக உப்பு, சா்க்கரை கரைசல் தின விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த பேளூா் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக உப்பு, சா்க்கரை கரைசல் தின விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஜூலை 29 உலக உப்பு, சா்க்கரை கரைசல் விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. வாழப்பாடியை அடுத்த பேளூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், திருமனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வியாழக்கிழமை உப்பு, சா்க்கரை கரைசல் தின விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் சிமி, பேரின்பம், ராகுல், பிரபாகரன், வினோத் ஆகியோா் வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பு குறித்தும், ஓ.ஆா்.எஸ். உப்பு, சா்க்கரை கரைசல் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கம் அளித்தனா்.
செவிலியா்கள் அனுராதா, தீபா, சித்ரா ஆகியோா் உப்பு, சா்க்கரை கரைசல் தயாரிக்கும் முறை, உபயோகிக்கும் அளவு குறித்து விளக்கினா். சுகாதார ஆய்வாளா்கள் செல்வபாபு, செல்வம், கோபி, மருத்துவப் பணியாளா்கள், பொதுமக்களுடன் இணைந்து சுகாதார உறுதிமொழி ஏற்றனா். சமுதாய சுகாதார செவிலியா் ராணி நன்றி கூறினாா்.