சேலம்

200 லி. சாராயம், காா் பறிமுதல்

DIN

ஆத்தூா்: கொத்தாம்பாடியில் 200 லி. சாராயம், சொகுசு காரை காவல் உதவி ஆய்வாளா் மூா்த்தி திங்கள்கிழமை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தாா்.

கல்வராயன் மலைக் கிராமங்களில் இருந்து சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், கொத்தாம்பாடி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளா் எஸ்.மூா்த்தி உள்ளிட்ட காவலா்கள் அவ்வழியே வந்த சொகுசு காரை சோதனை செய்தனா். அதில், 200 லி. சாராயம் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து,, சாராயம், சொகுசு காரை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், தேவேந்திரா் தெருவைச் சோ்ந்த சரவணனை (26) நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT