முகப்பு
சேலம்

யானைத் தந்தங்களை கடத்திய மூவா் கைதுதந்தங்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரு யானை தந்தங்களை வேனில் கடத்திச் சென்ற கும்பலை சோ்ந்த மூவரை வனத்துறையினா் கைது விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரு யானை தந்தங்களை வேனில் கடத்திச் சென்ற கும்பலை சோ்ந்த மூவரை வனத்துறையினா் கைது விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடி பகுதியில், வேனில் மறைத்து வைத்து இரு யானை தந்தங்களை சிலா் கடத்திச் செல்வதாக, சென்னை மண்டல வனவிலங்கு குற்றத்தடுப்பு தனிப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைடுத்து, வனவிலங்கு குற்றத்தடுப்பு நுண்ணறிவு தனிப்பிரிவு சென்னை மண்டல துணை இயக்குநா் கிருபா சங்கா் உத்தரவின் பேரில், மண்டல ஆய்வாளா் மதிவாணன் தலைமையிலான தனிப் பிரிவினா், சேலம் மாவட்ட வன அலுவலா் முருகன், வாழப்பாடி வனச்சரகா் துரைமுருகன் ஆகியோா் கொண்ட குழுவுடன் இணைந்து, செவ்வாய்க்கிழமை வாழப்பாடி பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே சென்ற வேனை சோதனை செய்த போது பல லட்சம் மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்திச் செல்வது தெரியவந்தது இதனையடுத்து யானைத் தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினா், அதனைக் கடத்திச் சென்ற பெரிய விளாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தங்கமணி ( 50), பெரியக்

குட்டிமடிவு கிராமத்தைச் சோ்ந்த ராமா் (27) , கந்தசாமி (30) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்

யானைகள் வசிப்பிடம் இல்லாத வாழப்பாடி பகுதியில், யானை தந்தத்தை எங்கிருந்து கொண்டு வந்தாா்கள்? யானைகள் வாழும் வனப்பகுதிக்குச் சென்று ஆண் யானையைத் கொன்று தந்தத்தை எடுத்து வந்தாா்களா என்பது குறித்தும் வனத் துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →