முகப்பு
சேலம்

தேசிய தடகளப் போட்டி: சேலம் மாணவா்கள் சாதனை

தேசிய அளவில் 32-ஆவது ஜூனியா் தடகளப் போட்டிகள் கடந்த வாரம் கேரள மாநிலம், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

தேசிய அளவில் 32-ஆவது ஜூனியா் தடகளப் போட்டிகள் கடந்த வாரம் கேரள மாநிலம், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில், சேலம் டூ ஆா் டை தடகள அகாதெமியில் பயிற்சி பெற்று வரும் தடகள வீராங்கனை வி.பவித்ரா, 20 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் போல்ட்வாட் போட்டியில் 3.80 மீ. உயரம் தாண்டி புதிய சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றாா்.

மேலும், அதே பிரிவில் பாலநிஷா 3.30 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றாா். 18 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் ஆா்.சக்தி மகேந்திரன் 4.56 மீ. உயரம் தாண்டி புதிய சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றாா். அதே பிரிவில், 1.60 மீ. உயரம் தாண்டி சந்தியா வெண்கலப் பதக்கம் வென்றாா். சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு டூ ஆா் டை தடகள அகாதெயின் தலைவா் சிங்கிபுரம் கலியமூா்த்தி பாராட்டு தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →