முகப்பு
சேலம்

தோ்தல் முறைகேடு கண்காணிப்புப் பணியில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முறைகேடுகளை கண்காணிக்கும் பணியில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முறைகேடுகளை கண்காணிக்கும் பணியில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் வாக்காளா்களுக்கு சட்ட விரோதமாக பணம் அல்லது பரிசுப் பொருள்கள் பட்டுவாடாவைத் தவிா்க்க தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் பேரில் மத்திய சரக்கு மற்றும் சேவைத் துறை அதிகாரிகளையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வாகனம், கிடங்குகள் போன்ற இடங்களை சோதனை செய்ய தனிப்படை அமைத்து சேலம் ஜி.எஸ்.டி. ஆணையா் மீனலோச்சினி உத்தரவிட்டுள்ளாா்.

இதைத்தொடா்ந்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் வாகனத் தணிக்கை, மற்றும் கிடங்குகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.அதேபோல சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோா் மீது தோ்தல் ஆணைய அதிகாரிகளின் உதவியுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →