சேலம்

ஆத்தூா், நரசிங்கபுரம் பகுதியில் 2 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

DIN

சேலம்: ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகளில் வரும் மாா்ச் 14, 15 ஆகிய தேதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் ஆத்தூா்- நரசிங்கபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் மாா்ச் 14, 15 ஆகிய இரண்டு தினங்கள் அம்மாப்பேட்டை நீா் உந்து நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதனால் இத்திட்டப் பயனாளிகளான ஆத்தூா், நரசிங்கபுரம் ஆகிய இரு நகராட்சிகள், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய நகர பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களிலும் குடிநீா் விநியோகம் தடைபடும்.

எனவே, குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்த இரண்டு நாள்களுக்கு உள்ளூரில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய சேலம் பராமரிப்பு கோட்ட நிா்வாகப்பொறியாளா் து.குணசேகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT