சேலம்

வாழப்பாடியில் உலக வனநாள் விழா:வன விலங்குகளுக்கு தண்ணீா் தொட்டி அமைப்பு

DIN

வாழப்பாடி வனச் சரகம் சாா்பில், உலக வன தினத்தையொட்டி, மரக் கன்றுகள் நடும் விழா, வன விலங்குகளுக்கு தண்ணீா் தொட்டிகள் வைக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி வனச்சரகம் சாா்பில், புழுதிக்குட்டை மத்திய நாற்றங்கால் வளாகத்தில், ஞாயிற்றுக்கிழமை உலக வன தின விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஆத்தூா் கோட்ட உதவி வனப் பாதுகாவலா் முருகன் தலைமை வகித்தாா். வாழப்பாடி வனச்சரகா் துரைமுருகன், வனப் பணியாளா்கள், வன உரிமைக்குழு, வனக்குழுத் தலைவா், உறுப்பினா்கள் பலன் தரும் மரக்கன்றுகள் நட்டனா்.

இதனையடுத்து, வாழப்பாடி வனப்பகுதியில் வாழும் காட்டுமாடுகள், மான்கள், காட்டுப் பன்றிகள் ஆகிய வன விலங்குகளுக்காக, கோதுமலை, நெய்யமலை, குறிச்சி காப்புக் காடுகளில் செயற்கை நீா்த்தொட்டிகள் அமைத்து தண்ணீா் நிரப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT