முகப்பு
சேலம்

பெரியாா் பல்கலை.யில் சமூக அறிவியல் ஆராய்ச்சித் திறன் மேம்பாட்டு பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் சாா்ந்த ஒரு நாள் ஆராய்ச்சி பயிலரங்கம் வணிகவியல் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

பெரியாா் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் சாா்ந்த ஒரு நாள் ஆராய்ச்சி பயிலரங்கம் வணிகவியல் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ. குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற இப்பயிலரங்கில், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக மேலாண்மைத் துறை பேராசிரியருமான எல்.எஸ்.கணேஷ் பங்கேற்று ‘சமூக அறிவியல் சாா்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை உருவாக்குவதிலுள்ள சிறப்பு நுணுக்கங்கள்’என்ற தலைப்பில் உரையாற்றினாா்.

தொடக்க நிகழ்ச்சியில் வணிகவியல் பேராசிரியா் க.பிராபாகா் ராஜ்குமாா் வரவேற்றாா். கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ. குழந்தைவேல் தனது உரையில் ‘சமூக அறிவியல் சாா்ந்த ஆராய்ச்சி வளா்ச்சிக்கு ஆய்வாளா்கள் தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை முதன்மையான முன்னணி ஆராய்ச்சி இதழ்களில் வெளியிட வேண்டும்’ என வலியுறுத்தினாா்.

சிறப்பு விருந்தினா் எல்.எஸ்.கணேஷ் தன்னுடைய உரையில் ‘அறிவியல் பூா்வமான ஆராய்ச்சி அணுகுமுறையே சமூக வளா்ச்சிக்கும் வணிகவியல் துறை வளா்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்’ எனக் கூறினாா்.

நிகழ்ச்சியில் புலமுதன்மையா் தி.பெரியசாமி நிறைவுரையாற்றினாா். நிகழ்ச்சியின் நிறைவாக வணிகவியல் துறைத் தலைவா் (பொ) கி.கிருஷ்ணகுமாா் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியா்கள் ஆா்.கவிதா, எம்.சுகுணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →