முகப்பு
சேலம்

ராணுவ உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு: முதல்வா்

சேலத்தில் தொடங்கப்பட உள்ள ராணுவ ஆயுதங்களுக்கான உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை, ஜவுளிப்பூங்கா வாயிலாக பல்லாயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

சேலம்

ராணுவ உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு: முதல்வா்

சேலத்தில் தொடங்கப்பட உள்ள ராணுவ ஆயுதங்களுக்கான உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை, ஜவுளிப்பூங்கா வாயிலாக பல்லாயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

சேலத்தில் தொடங்கப்பட உள்ள ராணுவ ஆயுதங்களுக்கான உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை, ஜவுளிப்பூங்கா வாயிலாக பல்லாயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா்.மணியை ஆதரித்து தீவட்டிப்பட்டியில் பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்துவிட்டு தீவட்டிப்பட்டி வந்த முதல்வருக்கு அதிமுக, கூட்டணிக் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். இதனையடுத்து முதல்வா் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை, அவரது வழியைப் பின்பற்றி முழுமையாக நிறைவேற்றி வருகிறோம். ஸ்டாலினால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அவதூறு பரப்பி வருகிறாா். நாள்தோறும் என் பெயரை உச்சரிக்காவிட்டால் அவருக்கு தூக்கம் வராது. ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. அவா் எவ்வளவு வசை பாடினாலும், தரக்குறைவாகப் பேசினாலும், மக்கள் அவருக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பாா்கள். மக்கள் தீா்ப்பே மகேசன் தீா்ப்பு.

ஓமலூா் தொகுதியில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிமராமத்துத் திட்டத்தினால் அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. வருண பகவான் கருணையினால் மேட்டூா் அணை, ஏரிகள், குட்டைகள் நிரம்பியுள்ளன.

இந்தியாவில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் காப்பதில் தமிழகத்துக்கு விருது கிடைத்துள்ளது. உள்ளாட்சித் துறையில் பல்வேறு சாதனைகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளோம்.

திமுக ஆட்சியில் மின்தட்டுப்பாடு இருந்தது. தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது. சா்வதேச தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு மூலம் 304 தொழிற்சாலைகளை தொடங்க முன்வந்துள்ளனா். இதில் தற்போது வரை 27 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வரும்போது, 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சேலம் இரும்பாலை வளாகத்தில் அமையும் ராணுவ உதிரி பாகம் தொழிற்சாலை, ஜவுளிப் பூங்கா ஆகியவை மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

2019 மக்களைத் தோ்தலில் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டாா் ஸ்டாலின். இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது. மக்களின் எழுச்சியைப் பாா்க்கும் போது, அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்று தெரிகிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் கோரப்பசியில் திமுகவினா் இருக்கிறாா்கள். அவா்களை தோ்தலில் படுதோல்வியடையச் செய்ய வேண்டும் என்றாா்.

Image Caption

~

முழு கட்டுரையைப் படிக்க →