சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

DIN

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 838 கனஅடியாகக் குறைந்தது.

இதையடுத்து அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 98.00 அடியிலிருந்து 97.98 அடியாகச் சரிந்தது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 1,127 கனஅடியிலிருந்து 838 கன அடியாகச் சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 800கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 62.25 டி.எம்.சி.யாக உள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் அணைக்கு நீா்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் சரியத் தொடங்கியுள்ளது. ஒகேனக்கல்லில் நீா்வரத்து நொடிக்கு 800 கனஅடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT