முகப்பு
சேலம்

கரோனா: குழுக்கள் அமைத்து கண்காணிப்பு

வாழப்பாடி வருவாய் வட்டத்தில், கரோனா பெருந்தொற்று பொது முடக்க விதிமீறலைத் தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

வாழப்பாடி வருவாய் வட்டத்தில், கரோனா பெருந்தொற்று பொது முடக்க விதிமீறலைத் தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாழப்பாடி வட்டத்தில் கரோனா பெருந்தொற்றின் வாழப்பாடி வட்டாட்சியா் மாணிக்கம் உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஊராட்சிகள் தோறும் மண்டல அலுவலா்கள் தலைமையில் செயல்படும் கண்காணிப்புக் குழுவில், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்களும் இணைந்து கிராமங்கள் தோறும், கரோனா பொது முடக்க விதிமீறலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சந்திரபிள்ளைவலசு ஆகிய கிராமங்களில், வட்டாட்சியா் மாணிக்கம் தலைமையில் மண்டல அலுவலா் விஜயக்குமாா், சுகாதார ஆய்வாளா் செல்வபாபு, கிராம உதவியாளா் காண்டியப்பன் ஆகியோா் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பொது முடக்க விதிமுறைகளை மீறியோருக்கு அபராதம் விதித்தனா். அத்தியாவசியமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த இளைஞா்களுக்கு கரோனா பரவலின் தாக்கம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.