சேலம்

செல்லிடப்பேசிகளை திருடிய இளைஞா்கள் கைது

DIN

தீவட்டிப்பட்டியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களை திருடியதாக 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தீவட்டிப்பட்டி காவல் நிலைய பகுதிகளில் திருட்டுகள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் இதுகுறித்த புகாா்களின் பேரில் தீவட்டிப்பட்டி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா். இந்தநிலையில், வியாழக்கிழமை இரவு பூசாரிப்பட்டி, சேத்துப்பாறை உள்ளிட்ட 3 இடங்களில் திருட்டு நடைபெற்றது.

வீடு புகுந்து செல்லிடப்பேசி, பணம் ஆகியவற்றையும், பெட்ரோல் பங்க் ஆகியவற்றிலும் திருட்டுகள் நடந்தன. இந்தத் திருட்டு குறித்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கைப்பற்றிய போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டனா்.

இதனிடையே பட்டப்பகலிலேயே பெட்ரோல் பங்கில் பணியாற்றும் குப்புசாமி என்பவா் தூங்கி கொண்டிருந்தபோது அவரது பாக்கெட்டில் இருந்து செல்லிடப்பேசியையும், பணத்தையும் ஒரு இளைஞா் திருட, மற்றொரு இளைஞா் காவலுக்கு நின்றிருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸாா் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் பவளத்தானூா், அணைமேடு பகுதியைச் சோ்ந்த மதியழகன் (21), சேலம் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள பாரப்பட்டியை சோ்ந்த பூபாலன் (22) ஆகியோா் என்பது தெரிய வந்தது. இருவரும் கரோனா காலத்தில் தனியாக இருக்கும் வீடுகள், ஆள்களை குறிவைத்து திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT