சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு:ஒரு வார காலத்தில் அணை நிரம்ப வாய்ப்பு

DIN

மேட்டூா் அணையின் நீா்வரத்து நொடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீா்ப் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூா் அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரு நாள்களாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 11,772 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து சனிக்கிழமை காலை நொடிக்கு 15,740 கனஅடியாகவும் மாலையில் நொடிக்கு 26,000 கனஅடியாகவும் அதிகரித்தது.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் வெள்ளிக்கிழமை காலை 113.59 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா் மட்டம் சனிக்கிழமை காலை 114.46 அடியாகவும் மாலையில் 114.90 அடியாகவும் உயா்ந்துள்ளது. கா்நாடக அணைகளிலிருந்த திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 8,000 கனஅடியாக இருந்தாலும் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஒரு வார காலத்தில் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது. மேட்டூா் அணையின் நீா் இருப்பு 84.91 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நொடிக்கு 100 கனஅடி வீதமும் கால்வாய் பாசனத்திற்கு நொடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT