சேலம்

மேட்டூர் அணை நிரம்புகிறது: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

காவிரி கரையோர மக்களுக்கு மேட்டூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உயர்ந்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் அணைக்கு வரும் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் என்பதால் மேட்டூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாளை அதிகாலை முதல் காவிரி ஆற்றில் உபரிநீர் அதிக அளவில் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT