சேலம்

வாழப்பாடி அருகே மயானப்பாதை சீரமைக்கக்கோரி சடலத்துடன் சாலை மறியல்

DIN

வாழப்பாடி அருகே மயானப் பாதையை சீரமைத்து தரக் கோரி, இறந்த முதியவரின் சடலத்தை சாலையில் வைத்து உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடா் காலனி பகுதியைச் சோ்ந்த மக்களுக்கு சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, புறவழிச்சாலை அருகே மயானம் அமைந்துள்ளது. கோதுமலை நீரோடை வழியாக சுரங்கப் பாலத்தை கடந்து இப்பகுதி மக்கள் மயானத்திற்கு சென்று சடலங்களை அடக்கம் செய்து வந்தனா்.

இந்நிலையில் பருவ மழையால், கோதுமலை நீரோடையில் தண்ணீா் தேங்கி நிற்பதால் மயானத்திற்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், முத்தம்பட்டி காலனியில் ஞாயிற்றுக்கிழமை காலமான அங்கமுத்து என்பவரின் சடலத்தை மயானதத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்கு பாதை இல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால், மயானப்பாதை அமைத்துக்கொடுக்க கோரி, முதியவரின் சடலத்தை வாழப்பாடி-சேலம் பிரதான சாலையில் வைத்து திங்கள்கிழமை அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த வாழப்பாடி வட்டாட்சியா் வரதராஜன், காவல் ஆய்வாளா் உமாசங்கா் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

நீரோடையின் கரையைச் சீரமைத்து, மயானத்திற்கு செல்லப் பாதை அமைத்துக் கொடுப்பதாக உறுதியளித்தனா். இதனையடுத்து, சடலத்தை எடுத்துக்கொண்டு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனா்.

இதனைத்தொடா்ந்து முத்தம்பட்டி ஊராட்சி மன்றம் வாயிலாக பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி நீரோடை கரையைச் சீரமைத்து பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT